தாயின் தாலாட்டு
தாயின் தாலாட்டு, அ.முத்துவேலன், அ.முத்துவேலன் வெளியீடு, விலை 90ரூ.
மரபுக் கவிதைகளும் புதுக்கவிதைகளுமாக மொத்தம் 42 கவிதைகள் இடம் பெற்றுள்ள இந்த நூல், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சிறிய புத்தகமாக இருந்தாலும் சீரிய முறையில் அமைந்து இருக்கிறது.
இதழியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பதால், தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வணக்கத்திற்கு அடுத்தபடியாக எழுத்தாணியைப் போற்றும் அழகிய கவிதை படைத்து இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து வந்து தமிழைப் போற்றி வளர்த்த அறிஞர்களைப் பாராட்டி இருக்கும் கவிஞர், கீழடி நாகரிகம், வைகை ஆற்றின் அன்றைய நிலை, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் பேர்வழிகள், முதியோர் இல்லக் குமுறல் என்று பல தரப்பட்ட கருத்துக்களையும் தனது கவிஅரங்கத்திற்குள் கொண்டு வந்து இருக்கிறார்.
கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தை தமிழர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி,19-2-20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818