கதைகளின் கடல்
கதைகளின் கடல், கதா சரித் சாகரம்.சோமதேவர், தமிழில்: வே.ராகவன், செம்பதிப்பு: கால சுப்ரமணியம், தமிழினி வெளியீடு, விலை: ரூ.170.
மத்திய கிழக்கு நாடுகள் கதைகளின் உலகத்துக்கு அளித்த கொடையாக ‘ஆயிரத்தொரு இரவுக’ளைக் கூறினால் இந்தியா அளித்த கொடையாக ‘கதா சரித் சாகரம்’ நூலைக் கருத வேண்டும். 11-ம் நூற்றாண்டில் காஷ்மீரைச் சேர்ந்த சோமதேவர் சம்ஸ்கிருதத்தில் இயற்றியது இந்த நூல்.
22 ஆயிரம் பாடல்களால் ஆனது இந்த நூல். இந்தியாவில் உலவும் பல நூறு கதைகளுக்கான மூலம் இந்தப் புத்தகம். இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 கதைகளை சம்ஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்து 1959-ல் சம்ஸ்கிருத அறிஞர் டாக்டர் வே.ராகவன் புத்தகமாக வெளியிட்டிருந்தார். இதை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு செம்பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறார் கால சுப்ரமணியம்.
அரசர்கள், வியாபாரிகள், திருடர்கள், துறவிகள், முட்டாள்கள், அதிமேதாவிகள் என்று இந்த நூல் காட்டும் உலகம் அலாதியானது. உலகமெங்கும் வழங்கப்படும் நாட்டார் கதைகள் பலவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே ஒப்புமை காண முடிகிறது.
நன்றி: தமிழ் இந்து ,04.04.2020 .
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818