சிறுகதை என்னும் கலைவடிவம்
சிறுகதை என்னும் கலைவடிவம், காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு, விலை : ரூ.300.
சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மேதமைகள் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திப் பார்த்து வெற்றிகண்ட வடிவம் தமிழ்ச் சிறுகதை வடிவமாகும். சிறுகதை வரலாறு, எழுத்துப் போக்குகள், இயக்கங்கள் அடிப்படையில் இருபது சிறுகதை ஆசிரியர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளன.
தமிழ்ச் சிறுகதைகளில் சாதனை நிகழ்த்திய புதுமைப்பித்தன், மௌனி, கு. ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகிய முதல் தலைமுறையினர் பற்றிய கட்டுரைகள் வரலாற்று நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை. வீ.அரசு, சுந்தர ராமசாமி தொடங்கி கவிதைக்காரன் இளங்கோ வரை வெவ்வேறு முகாம்களிலிருந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
வேறு வேறு பின்னணிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த நூலுக்காகத் தொகுக்கப்பட்டிருப்பதால் விடுபடுதல்களையும் உணர முடிகிறது. விடுபடுதல்கள் இருப்பினும் சராசரியான சிறுகதை எழுத்தாளர் யாரும் இந்த நூலில் சேர்க்கப்படவில்லை. சிறுகதை வடிவம் செய்திருக்கும் பயணத்தை இந்த நூலின் தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ் காண்பிக்கிறார்.
நன்றி: தமிழ் இந்து.,04.04.2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818