காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு, விலை: ரூ.300. நவீன சிறுகதை இலக்கியத்தில் சாதனைகள் படைத்த இருபது எழுத்தாளர்களைப் பற்றி தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்களும் எழுத்தாளர்களுமான பத்திரிகையாளர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார் தமிழ்ப் பேராசிரியரும் இலக்கிய விமர்சகருமான சுப்பிரமணி இரமேஷ். திறனாய்வுத் துறையில் ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சி என்ற வகையில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ‘காலத்தை எதிர்த்துக் கரையேறிய கதைகள்’ என்ற தலைப்பிலான தொகுப்பாசிரியரின் முன்னுரை, தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றையும் சுருங்கச் […]

Read more

சிறுகதை என்னும் கலைவடிவம்

சிறுகதை என்னும் கலைவடிவம், காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு,  விலை : ரூ.300. சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மேதமைகள் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திப் பார்த்து வெற்றிகண்ட வடிவம் தமிழ்ச் சிறுகதை வடிவமாகும். சிறுகதை வரலாறு, எழுத்துப் போக்குகள், இயக்கங்கள் அடிப்படையில் இருபது சிறுகதை ஆசிரியர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் சாதனை நிகழ்த்திய புதுமைப்பித்தன், மௌனி, கு. ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகிய முதல் தலைமுறையினர் […]

Read more