காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு, விலை: ரூ.300. நவீன சிறுகதை இலக்கியத்தில் சாதனைகள் படைத்த இருபது எழுத்தாளர்களைப் பற்றி தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்களும் எழுத்தாளர்களுமான பத்திரிகையாளர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார் தமிழ்ப் பேராசிரியரும் இலக்கிய விமர்சகருமான சுப்பிரமணி இரமேஷ். திறனாய்வுத் துறையில் ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சி என்ற வகையில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ‘காலத்தை எதிர்த்துக் கரையேறிய கதைகள்’ என்ற தலைப்பிலான தொகுப்பாசிரியரின் முன்னுரை, தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றையும் சுருங்கச் […]

Read more

சிறுகதை என்னும் கலைவடிவம்

சிறுகதை என்னும் கலைவடிவம், காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு,  விலை : ரூ.300. சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மேதமைகள் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திப் பார்த்து வெற்றிகண்ட வடிவம் தமிழ்ச் சிறுகதை வடிவமாகும். சிறுகதை வரலாறு, எழுத்துப் போக்குகள், இயக்கங்கள் அடிப்படையில் இருபது சிறுகதை ஆசிரியர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் சாதனை நிகழ்த்திய புதுமைப்பித்தன், மௌனி, கு. ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகிய முதல் தலைமுறையினர் […]

Read more

சிதைந்த கூடு முதலிய கதைகள்

சிதைந்த கூடு முதலிய கதைகள், ரவிந்தீரநாத் தாகூர், தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 288, விலை 175ரூ. தாகூர் நல்ல படைப்பாளி. கவிதை, கதை, நாடகம் போன்றவற்றில் முத்திரை பதித்தவர். அவர், இந்த சிறுகதைத் தொகுதியில், பெண்கள் தம் வாழ்க்கைப் போக்குகளில் எதிர்கொள்ளும் கொடுமைகள், துயரங்கள், தன்னிச்சையான மனநிலை, இவற்றோடு லட்சியத்தாகம் முதலானவற்றை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை மையப்படுத்திய இச்சிறுகதைகள் யதார்த்தமான தளத்தில் நகர்கின்றன. தாகூரின் கதைகளில் பெண்களுக்கான பரிவும், பாசமும் பல கதைகளில் தென்படும். இந்நூலில் அமைந்துள்ள பத்துக் கதைகளும் […]

Read more

குடியரசு

குடியரசு, கிரேக்கத்தில் தத்துவஞானி பிளாட்டோ, சாகித்ய அகாடமி வெளியீடு. தலைவனுக்குத் தகுதி எது? தத்துவஞானி பிளாட்டோ கிரேக்க மொழியில் எழுதி, சாகித்ய அகாடமி தமிழில் வெளியிட்டுள்ள, ‘குடியரசு’ நூலை அண்மையில் படித்தேன். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நூல் சொல்கிறது. நாட்டை வழி நடத்துபவன் ஒரு தத்துவஞானியாக இருக்க வேண்டும் என்பது, நூல் ஆசிரியரின் நோக்கமாக இருந்தாலும், அவனுடைய கருத்துக்கள் மக்களிடையே எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும் என்பதால், அரசுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்தியாக, தத்துவஞானிகள் இருக்க வேண்டி உள்ளது […]

Read more

எரியும் பூந்தோட்டம்

எரியும் பூந்தோட்டம், தெலுங்குமூலம் சலீம், தமிழில் சாந்தா தத், சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 256, விலை 145ரூ. நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை, விஞ்ஞானப் பூர்வமாய் அணுகும் வித்தியாசமான பார்வை கொண்டவை, சலீம் படைப்புகள். எய்ட்ஸ் எனும் கொடிய நோய் குறித்தும், அது தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பிரச்னைகள் குறித்தும், சுவாரசியமிகு ஆய்வு ஒன்றை முன்வைத்துள்ள நாவல் இது. இரண்டு குடும்பங்கள். ஒன்று மத்தியதரவர்க்கம். இன்னொன்று அடித்தட்டு வர்க்கம். இரு குடும்பங்களுமே, எய்ட்சால் பாதிக்கப்பட்டவை. எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் இதயம் உண்டு எனும் […]

Read more