கல்லாப் பிழை

கல்லாப் பிழை, க.மோகனரங்கன், தமிழினி வெளியீடு, விலை: ரூ.90. க.மோகனரங்கன். இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தைக் கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்துசெல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும் தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு கதைத் தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்கள் என இவரின் பங்களிப்புகள் காத்திரமானவை. ‘வாசனை’ கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி ‘கிளிப்பெண்’ணோடு கூடடைந்தது நல்ல அனுபவம். […]

Read more

வால்வெள்ளி

வால்வெள்ளி, எம்.கோபாலகிருஷ்ணன், தமிழினி வெளியீடு, விலை 130ரூ. மனநெருக்கடிகளின் கதைகள் உளவியல் சிக்கல்களை நுட்பமாகக் கையாளும் படைப்பாளிகளுள் ஒருவரான எம்.கோபாலகிருஷ்ணனின் புதிய குறுநாவல் தொகுப்பு இது. நான்கு குறுநாவல்கள். பிள்ளைகளுக்கு அம்மாவாகவும், கணவனுக்கு மனைவியாகவும் வாழ்க்கை நடத்தும் பெண் ஒருத்தி தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொள்ளும் தருணங்களைப் பேசுகிறது ‘வால்வெள்ளி’; ஏற்கெனவே இந்தக் களம் பலமுறை கையாளப்பட்டிருந்தாலும் கவித்துவமான வரிகளும் நுட்பமான தருணங்களும் புதுமையான வாசிப்பைத் தருகின்றன. செய்யாத குற்றத்துக்காகக் காவல் துறையிடம் சிக்கிக்கொள்ளும் ஒருவர் எப்படியான மனநெருக்கடிக்கு உள்ளாகிறார் என்பதைச் சொல்கிறது ‘ஊதாநிற விரல்கள்’. […]

Read more

ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை; மாற்கு, தமிழினி வெளியீடு, விலை: ரூ.300/- 2018-ல் வெளிவந்த இந்நாவல் நல்லூர் என்ற கற்பனைக் கிராமத்தைப் பற்றியது. அரசு உதவிகளைப் பெற மறுக்கிறார்கள் அவ்வூர் மக்கள். உண்மை நிலையறிய விரும்பும் மாவட்ட ஆட்சியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பயணியாக அந்த ஊருக்குச் செல்கிறார். நல்லூரின் வாழ்க்கைமுறைதான் சரியானது எனத் தெளிந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார். மக்கள்விரோத கொள்ளைத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க மறுத்து, தனது பதவியிலிருந்தும் விலகிவிடுகிறார். மக்களுக்குத் தனது பதவியால் ஏதாவது நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்று உண்மையாகவே நம்பி, […]

Read more

கதைகளின் கடல்

கதைகளின் கடல், கதா சரித் சாகரம்.சோமதேவர், தமிழில்: வே.ராகவன், செம்பதிப்பு: கால சுப்ரமணியம், தமிழினி வெளியீடு, விலை: ரூ.170. மத்திய கிழக்கு நாடுகள் கதைகளின் உலகத்துக்கு அளித்த கொடையாக ‘ஆயிரத்தொரு இரவுக’ளைக் கூறினால் இந்தியா அளித்த கொடையாக ‘கதா சரித் சாகரம்’ நூலைக் கருத வேண்டும். 11-ம் நூற்றாண்டில் காஷ்மீரைச் சேர்ந்த சோமதேவர் சம்ஸ்கிருதத்தில் இயற்றியது இந்த நூல். 22 ஆயிரம் பாடல்களால் ஆனது இந்த நூல். இந்தியாவில் உலவும் பல நூறு கதைகளுக்கான மூலம் இந்தப் புத்தகம். இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 […]

Read more

விதை அரசியல்

விதை அரசியல், பாமயன், தமிழினி வெளியீடு, விலை 95ரூ. இடுபொருட்களை விற்பனைசெய்து வேளாண்மையில் இனிமேலும் பெரும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடிமடியில் கை வைக்கும் விதமாக விதை வியாபாரத்தை கையில் எடுத்துள்ளன. இது எப்படிப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விதை அரசியல்

விதை அரசியல, பாமயன் , தமிழினி வெளியீடு , இடுபொருட்களை விற்பனைசெய்து வேளாண்மையில் இனிமேலும் பெரும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடிமடியில் கை வைக்கும் விதமாக விதை வியாபாரத்தை கையில் எடுத்துள்ளன. இது எப்படிப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more