ஐம்பேரியற்கை
ஐம்பேரியற்கை; மாற்கு, தமிழினி வெளியீடு, விலை: ரூ.300/-
2018-ல் வெளிவந்த இந்நாவல் நல்லூர் என்ற கற்பனைக் கிராமத்தைப் பற்றியது. அரசு உதவிகளைப் பெற மறுக்கிறார்கள் அவ்வூர் மக்கள். உண்மை நிலையறிய விரும்பும் மாவட்ட ஆட்சியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பயணியாக அந்த ஊருக்குச் செல்கிறார். நல்லூரின் வாழ்க்கைமுறைதான் சரியானது எனத் தெளிந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார்.
மக்கள்விரோத கொள்ளைத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க மறுத்து, தனது பதவியிலிருந்தும் விலகிவிடுகிறார். மக்களுக்குத் தனது பதவியால் ஏதாவது நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்று உண்மையாகவே நம்பி, ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று உணரும் ஒரு இளம் அதிகாரியின் பார்வையிலிருந்தே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. தன்னிறைவும் தற்சார்பும் கொண்ட கிராமம் என்பது நிறைவேற்ற முடியாத கருத்தாக்கமல்ல; சாத்தியமே என்பதை ஒரு கொள்கைத் திட்டமாக விவரிக்கிறது
‘ஐம்பேரியற்கை’. இயற்கையோடு இயைந்த வாழ்வு, கூட்டுமுறை வாழ்க்கை, பொதுச் சமையலறை, திருமணம் தவிர்த்து ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கும் அனுமதி என்று விரிகிறது இந்த லட்சியக் கிராமம். இன்றைய தமிழ்ப் புனைவுலகில் அனுபவம், கற்பனை எல்லாவற்றையும் தாண்டி உழைப்பே பிரதானமாகப் பேசப்படும் நிலையில், லட்சியங்களுக்கும் தவிர்க்கவியலாத ஒரு இடமிருக்கிறது என்பதை அழுத்தமாக நிறுவும் நாவல் இது.
நன்றி.தமிழ் இந்து. 13.06.2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818