வால்வெள்ளி

வால்வெள்ளி, எம்.கோபாலகிருஷ்ணன், தமிழினி வெளியீடு, விலை 130ரூ. மனநெருக்கடிகளின் கதைகள் உளவியல் சிக்கல்களை நுட்பமாகக் கையாளும் படைப்பாளிகளுள் ஒருவரான எம்.கோபாலகிருஷ்ணனின் புதிய குறுநாவல் தொகுப்பு இது. நான்கு குறுநாவல்கள். பிள்ளைகளுக்கு அம்மாவாகவும், கணவனுக்கு மனைவியாகவும் வாழ்க்கை நடத்தும் பெண் ஒருத்தி தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொள்ளும் தருணங்களைப் பேசுகிறது ‘வால்வெள்ளி’; ஏற்கெனவே இந்தக் களம் பலமுறை கையாளப்பட்டிருந்தாலும் கவித்துவமான வரிகளும் நுட்பமான தருணங்களும் புதுமையான வாசிப்பைத் தருகின்றன. செய்யாத குற்றத்துக்காகக் காவல் துறையிடம் சிக்கிக்கொள்ளும் ஒருவர் எப்படியான மனநெருக்கடிக்கு உள்ளாகிறார் என்பதைச் சொல்கிறது ‘ஊதாநிற விரல்கள்’. […]

Read more