சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்
சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம், மூன்றெழுத்து பதிப்பகம், விலைரூ.400.
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என, புகழப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு.
தி.மு.க.,விலிருந்து நீக்கம், மனதை மாற்றிய மூதாட்டிகள், இடைத் தேர்தலும் இரட்டை இலை சின்னமும் உள்ளிட்ட தலைப்புகள், அவரது அரசியல் வாழ்வை படம் பிடிக்கின்றன.
அறையில் மது பாட்டில்கள், விரும்பிக் கேட்ட சுறா மீன் குழம்பு, மறக்க முடியாத நகைச்சுவை, பூரியும் பாஸந்தியும், உதவியாளராக ஆசைப்பட்ட தமிழாசிரியர் போன்ற தலைப்புகள் சுவாரசியம் மிக்கவை.
அரசியல், சினிமா ஆர்வலர்கள் விரும்பிப் படிக்கும் அரிய பொக்கிஷம்.
– மாசிலா ராஜகுரு
நன்றி: தினமலர், 13/9/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818