சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம்,  மூன்றெழுத்து பதிப்பகம், விலைரூ.400. மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என, புகழப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு.தி.மு.க.,விலிருந்து நீக்கம், மனதை மாற்றிய மூதாட்டிகள், இடைத் தேர்தலும் இரட்டை இலை சின்னமும் உள்ளிட்ட தலைப்புகள், அவரது அரசியல் வாழ்வை படம் பிடிக்கின்றன. அறையில் மது பாட்டில்கள், விரும்பிக் கேட்ட சுறா மீன் குழம்பு, மறக்க முடியாத நகைச்சுவை, பூரியும் பாஸந்தியும், உதவியாளராக ஆசைப்பட்ட தமிழாசிரியர் போன்ற தலைப்புகள் சுவாரசியம் மிக்கவை. அரசியல், சினிமா […]

Read more

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம், மூன்றெழுத்து பதிப்பகம், பக். 456, விலை ரூ.400. மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உதவியாளராக 1972 – ஆம் ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்து 1987 – ஆம் ஆண்டு டிசம்பர் எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடன் நெருக்கமாக இருந்தவர் நூலாசிரியர் கே.மகாலிங்கம். எம்.ஜி.ஆர். என்ற தலைவரின், ஆட்சியாளரின், தனிமனிதரின் சிறப்புகளைக் கூறும் இந்நூல் பலரும் அறியாத தகவல்களின் கருவூலமாக உள்ளது. 1972 – இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது, அதற்காக கருணாநிதி மேற்கொண்ட செயல்கள், தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக […]

Read more