தாளடி
தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை 230ரூ.
நீரும் நெருப்பும்
சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத் தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றின் சித்திரங்களும் தாராளமாகப் புழங்கி அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய அந்த கிராமங்களுக்குக் கொண்டு செல்கின்றன.
இந்த நாவலில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு உள்ளே செல்லும் ஆசிரியர் கீழ்வெண்மணி சம்பவத்தை முன்வைத்து நிஜமான பாத்திரங்களையே உள்ளே உலவவிட்டு புன்னகைக்கிறார். 1967 டிசம்பர் 25 ஆம் தேதி நடந்த அந்த கோரச்சம்பவத்தை நோக்கி இந்நாவல் நகர்ந்தாலும் அக்கால அரசியல், நிலஉடைமை, விவசாயக் கூலிகளின் வாழ்க்கை ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது.
நன்றி: அந்திமழை, 1/10/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818