தாளடி

1967 தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை: ரூ.230 குடிசை நெருப்பில் குளிர்காயும் புனைவு ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் இலக்கிய மதிப்பீடுகளில் மட்டுமின்றி, அரசியல் கருத்துகளிலும் தனது மாறுபட்ட பார்வைகளைத் தயங்காது முன்வைப்பவர். சமீபத்தில் அவர் எழுதியிருக்கும் ‘1967 தாளடி’ நாவல், நேர்க்கோட்டு முறையைத் தவிர்த்து, கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறிப் பயணிக்கிறது. பாத்திரங்களுக்கு இடையிலும் கூடுவிட்டுக் கூடுபாய்கிறது. நாட்டியம், ஓவிய நுண்கலைஞர்களின் மனவோட்டங்களையும் ரசிக மனோபாவங்களையும் விவரிக்கிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஹம்பிக்கும் அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் நாவல் பயணிக்கிறது. நிர்வாண ஓவியங்களை […]

Read more

தாளடி

தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை 230ரூ. நீரும் நெருப்பும் சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத் தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றின் […]

Read more

அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. அப்பாவை புதுப்பிப்பது? இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு, விலை 575ரூ. காலதரிசனம் கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டுகால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது. நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்த தொடர்பற்ற தன்மையைத் தாண்டி, மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல். மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், பக்.392, விலை ரூ.575. இந்நூலை ‘நாவல் 39‘ என்று கூறி பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நாவலுக்குஉரிய எந்தவிதமான இலக்கணமும் இதில் இல்லை. தெளிவான கதை இல்லை; தொடர்ச்சியாகச் செல்லும் சம்பவங்கள் இல்லை; பல கதைகளின், சம்பவங்களின், தகவல்களின் தொகுப்பாக உள்ள இந்நூலில், எதுவுமே முழுமையான கதையாகப் பதிவு செய்யப்படவில்லை. பல காலங்களில், பல இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், பல மனிதர்களின் மனக் குரல்களையே இது எதிரொலிக்கிறது. அதனால், இந்நாவலை வாசிப்போர்க்கு முதலில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவை. […]

Read more