விடம்பனம்
விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு, விலை 575ரூ. காலதரிசனம் கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டுகால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது. நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்த தொடர்பற்ற தன்மையைத் தாண்டி, மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல். மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை […]
Read more