உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள், பி.சி.கணேசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.80
நோயின்றி வாழ வழியும், நோய் வந்தால் நீக்க எளிய வழிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன. மனித உடல் ஓர் இயற்கை அற்புதம் என்று துவங்கி, 14 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். உடலில் ஆறு நரம்பு மையங்களை, ஏழு பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது.
அக்கு பங்சர், அக்குபிரஷருக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறுகிறது. திருமூலர் சொல்லும் ஆசன முறைகள், சித்தர்கள் கூறும் சுவாசப் பயிற்சி, உடல் இயக்க முறை, உடலில் சக்கரங்களைப் பற்றியும் விளக்குகிறது.
எந்த நோயையும் தானே குணப்படுத்திக் கொள்ளும் சக்தி உடலுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது என கூறுகிறது. செலவு இல்லை, சிரமமும் இல்லை. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளம் என்று கூறுகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் இரா.நாராயணன்
நன்றி: தினமலர், 23/8/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006732_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818