அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள்
அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், விலைரூ.200.
பெரிய புராணத்தில் இடம்பெற்ற பெண்களில், 19 பேரின் வரலாற்றை படைத்துள்ளார். இதில், 13 பேர் இல்லத்தரசியராகவும், ஒருவர் மகள் என்னும் நிலையிலும் ஒருவர் தாய் என்னும் நிலையிலும், இன்னொருவர் தமக்கை என்னும் நிலையிலும் இடம்பெற்றுள்ளனர். மூன்று பேர் நாயன்மார் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். கட்டுரையின் மையத்தை உள்ளடக்கிய பழமை மாறாத அழகிய ஓவியத்தை பதித்து மெருகூட்டியுள்ளார்.
எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புடன் அமைந்துள்ளது. பக்தி இலக்கிய வரிசையில் பரவசமூட்டும் புத்தகம்.
நன்றி: தினமலர், 23/5/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818