நகைச்சுவை நாடகங்கள்
நகைச்சுவை நாடகங்கள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.325
நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்டுள்ள நாடகங்களின் தொகுப்பு நுால். மொத்தம், 15 நாடகங்கள் உள்ளன; அனைத்தும், வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகி புகழ்பெற்றவை; நேயர்களிடம் பாராட்டுகளை பெற்றவை.
நுகர்வோர் சட்டங்களை மிக எளிமையாக புரிய வைக்கும் நுட்பத்துடன் எழுதப்பட்டுள்ளது. அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் மருத்துவம், நுகர்வோர் உரிமை போன்ற பொருளடக்கங்களைக் கருவாகக் கொண்டுள்ளன. வாசிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏதுவாக உள்ளன. மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளன.
சிறு சுலபமான உரையாடல்கள் மிகவும் நயமாக வும், ஆர்வத்தை துாண்டும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. வாழ்வின் அன்றாட செயல்பாட்டில் அடிப்படையாக எழும் கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் அமைந்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கு உதவும் நுால்.
நன்றி: தினமலர், 6.6.21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818