அமுதே! தமிழே! அருமருந்தே!
அமுதே! தமிழே! அருமருந்தே!, மா.கி.ரமணன், பூங்கொடி பதிப்பகம், விலைரூ.180.
எளிய தமிழில், 27 கட்டுரைகளில் பக்தி இலக்கியச் சிந்தனைகளைப் படைத்துள்ளார். உடல் நோய்க்கும், மன நோய்க்கும் மருந்து வழங்கும் வல்லமை படைத்தது திருக்குறள் என துவங்கி, திரையிசைக் கவியரசர் மூவர் என்ற கட்டுரையுடன் நிறைவு செய்து உள்ளார்.
தமிழ் மொழியின் பழமை முதற்கொண்டு புதுமை வரை, படையல் ஆக்கியுள்ளார். திருமந்திரத்தில் உடல் நோய், மன நோய், மூளை நோய், பிறவி நோய் நீக்கும் மருத்துவ முறைகள் சொல்லப்பட்டுள்ள தன்மையை விளக்கியுள்ளார்.
இசையால் இசைவான் இறைவன் என்னும் கட்டுரையில் ராவணனின் இசைத் திறத்தையும், வடமொழி பாகவதரைத் தோற்றோடச் செய்த பாணப்பத்திரரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் தான் நோய்க்கு மருந்து என்னும் உண்மையை, பக்தி இலக்கியத்தின் துணையுடன் நிறுவியுள்ளார்.
– முகிலை ராசபாண்டியன்
நன்றி: தினமலர், 4.4.21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031334_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818