பச்சையம் என்பது பச்சை ரத்தம்
பச்சையம் என்பது பச்சை ரத்தம், பிருந்தா பார்த்தசாரதி, படைப்பு பதிப்பகம், விலைரூ.100.
தாவரங்களை கருப்பொருளாகவும், உரிப்பொருளாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கையை எண்ணி எழுதியுள்ளார் நுாலாசிரியர். நீண்ட முன்னுரையுடன் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
மண்ணைத் தோண்டி கிழங்கு எடுத்தேன்; கருணையின் வாசனை என்று ஒரு கவிதை. புலி உறுமியது; பயப்படாமல் நிமிர்ந்தே நிற்கிறது சிறு புல் போன்ற சுவாரசியமான சிறு கவிதைகள் உள்ளன. வங்காரி மாத்தாய், பூக்கோ போன்ற சூழல் பாதுகாப்பு முன்னோடிகளின் பொன்மொழியும் தொகுப்பில் உள்ளது.
நன்றி: தினமலர், 4.4.21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818