கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன், திருப்புகழ் மதிவண்ணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220.
‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’ என்ற பழமொழிக்கு இணங்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதி வரலாற்றை விளக்கும் நுால்.
பக்திரசம் சொட்ட எழுதியுள்ளார் மதிவண்ணன். கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், நக்கீரர், தாயுமானவர், வள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி, சரளமான நடையில் தற்கால பாடல் வரிகளையும் புகுத்தி எழுதப்பட்டுள்ளது.
கந்தனின் பிறப்பு, வளர்ப்பு, திருவிளையாடல்கள், வேல் பெற்று அசுரரை அழித்தல், தேவியரை மணத்தல் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளது. கந்தனின் சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கு உடல் நலம், செல்வ வளம், ஆன்ம பலம் ஆகியவை கிடைப்பது நிச்சயம் என்று காஞ்சி மகா பெரியவர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்த நுாலைப் படிப்பவர்கள், கந்தன் கருணையையும் அருளையும் நிச்சயம் பெறுவர்.
– இளங்கோவன்
நன்றி: தினமலர்,25/7/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031469_-8/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818