கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!
கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!, முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80
‘புதியன கண்ட போழ்து விடுவரோபுதுமை பார்ப்பார்’ என்ற கம்பன் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பல்வேறு அரிய அறிவியல் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். ஆற்றல் அழிவின்மை விதியை உணர்த்தும் முதல் பாடல் துவங்கி, யுத்த காண்டத்தில், கம்பன் கணக்காக படைகளின் பலத்தைக் காட்டுவது ஈறாக, 19 கட்டுரைகளில் அறிவியல் நுட்பம் அணிவகுத்து உள்ளது.
சோலார் கருவிகளின் பயன்பாட்டை, வருணனை வழி வேண்டுபடலத்தில் ஒப்பிடும் திறம் புதுமை. ‘விசை இலவாக தள்ளி வீழ்ந்தன’ என்னும் வரிகளை நியூட்டனின் இயக்க விதிகளோடு பொருத்துவது என பல தகவல்கள் சுவாரசியமான முறையில் விளக்கப்பட்டுள்ளன.
– பின்னலுாரான்
நன்றி: தினமலர்,25/7/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818