பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!
பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155.
விடுதலைக் குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர்.
காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு எனப் பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன.
யுகக் கவிஞர் பாரதி குறித்த, ‘நாளும் ஒரு பாரதி சிந்தனை’ என்னும் தலைப்பிலான புலனச்செய்திகளின் தொகுப்பே, நுாலாக வடிவம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
– ராமலிங்கம்
நன்றி: தினமலர், 12/9/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818