40 பிளஸ் மாற்றம்
40 பிளஸ் மாற்றம், வள்ளியம்மை அருணாச்சலம், சில்வர்பிஷ், விலைரூ.220.
இளம் வயதில் நடந்த வாழ்க்கை சம்பவங்களை, நினைவில் கொண்டு, 40 வயதில் அலசி ஆராய்ந்து தீர்வைத் தேடும் முயற்சியாக எழுதப்பட்டுள்ள நுால். புரிதலே சிறந்த அறிவு என்ற முத்திரை சொல்லை மெய்யாக்கும் வகையில் உள்ளது.
எதிர்பாராத சிறிய சம்பவம், வாழ்வின் போக்கையே மாற்றி அமைத்து விடும். மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி, முட்டுக்கட்டை போட்டுவிடும். இது போன்ற நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம் பற்றி, சிந்தித்து தீர்வுகளை சொல்ல முயல்கிறார்.
சம்பவங்களை மன ஆழத்தில் விவாதித்து, பொதுமைப்படுத்தி இயல்பை வெளிப்படுத்தும் முயற்சியை காண முடிகிறது. உடலையும், மனதையும் இயல்பாக பேண முயல்வதும் தெரிகிறது. குற்ற நோக்குடன், அனுபவங்களை அணுகாமல், ஆழமாக சிந்தித்து படிப்பினையை முன் வைக்கிறார்.
அனுபவங்களில் இருந்தே இந்த புத்தகத்துக்கான சொற்கள் பிறக்கின்றன. வாழ்க்கையை எளிமையாக அணுக வழி காட்டும் நுால்.
நன்றி: தினமலர், 21-2-21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818