திருநாராயணீயம்
திருநாராயணீயம், பிறைசூடன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.350.
நாராயணனின் பெருமையைக் கூறும் நுால். நாராயண பட்டத்ரியால், வடமொழியில் எழுதப் பட்ட ஸ்லோகம். வடமொழியில் எழுதப்பட்ட ஸ்லோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, 100 தசகங்களாக கவிதையில் எழுதியுள்ளார். கண்ணனின் லீலைகளை எளிய நடையில் தந்துள்ளார். கம்சனின் குவலயம் என்ற பட்டத்து யானையை வென்ற செயல் மற்றும் மல்லர்களைக் கொன்றது போன்ற நிகழ்வுகள், படிப்போரைப் பரவசப்படுத்தும்.
வடமொழியில் உள்ள ஸ்லோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது எளிதான செயலன்று. நுாலைப் படித்து குருவாயூரப்பனின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
– பேராசிரியர் இரா.நாராயணன்.
நன்றி: தினமலர்,25/4/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818