இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், விலைரூ.150
இலக்கியம் பற்றிய சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல கட்டுரைகள் விவாதத்துக்கு ஏற்றவை. தமிழர்களின் சிந்தனை வளம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
இலக்கிய வட்டம் இதழில், 60 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளன. தமிழர் மூளையில் தர்க்கப்பூர்வ சிந்தனையை துாண்டும் வகையில் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது.
மரபு வழியில் தேங்கிவிட்ட ஒரு சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை மற்றும் கவலை தொனிக்க எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்பதில் துவங்கி, ஷேக்ஸ்பியரும் கம்பனும் என்பது வரை 26 கட்டுரைகள் உள்ளன.
உலக அளவில் சிறந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளன. அவற்றின் சிந்தனை திசையை காட்டும் வகையில் அமைந்துள்ளன. படைப்பையும், வாழ்வையும் சிந்தனை பூர்வமாக அணுக துாண்டும் நுால்.
– பாவெல்
நன்றி: தினமலர், 30/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818