பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை
பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.340

‘பச்சைப் புடவைக்காரி’ என உச்சரிக்கும்போதே தெய்வத்துடனான நெருக்கமான உறவு புலப்படுகிறது. மனிதனுக்கு மனசாட்சி எப்படி உள்ளுக்குள்ளேயே இருந்து நல்லது, கெட்டதைப் பகுத்தாய்ந்து வழி நடத்துமோ, அவ்வாறு பச்சைப் புடவைக்காரியான அன்னை மீனாட்சி உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை நுால் முழுதும் பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி, அலுப்பு ஏற்படாவண்ணம் விவரித்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி.
ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வாழ்விலும், மற்றவர்கள் வாழ்விலும் நிகழும் சில சம்பவங்கள், கடவுள் குறித்த சந்தேகத்தைக் கிளப்புவது சகஜமே. இந்நுாலில் எழுதப்பட்டுள்ள சம்பவங்களும், அதற்கு பச்சைப் புடவைக்காரி கொடுத்த விளக்கமும் சிலருக்கு கற்பனைக் கதை போலத் தோன்றலாம். ஆனால், ஒவ்வொருவரும் வாழ்வில் இத்தகைய அனுபவங்களை ஒரு முறையாவது பெற்றிருப்பர்.
போதிய மெய் ஞான அனுபவம் இல்லாததால் அதைப் புரிந்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம். அதே போல் நுால் ஆசிரியர் தன்னை பச்சைப் புடவைக்காரியின் கொத்தடிமை என குறிப்பிடுகிறார். இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல; கடவுளிடம் முழு சரணாகதி அடைவதைத் தான் இது குறிப்பிடுகிறது. இது புத்தகம் அல்ல; வாழ வேண்டிய வாழ்க்கை என்றால் மிகையாகாது.
– இளங்கோவன்.
நன்றி: தினமலர், 15/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818