பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை
பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை, பதிப்பாசிரியர்: முனைவர் கி.இராசா, பார்த்திபன் பதிப்பகம்; விலை:ரூ.60.
பகவத் கீதையில் உள்ள அத்தனை ஸ்லோகங்களுக்கும் மகாகவி பாரதியார் எழுதிய விளக்க உரை இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அவர் ரத்தினச் சுருக்கமாக சில வரிகளில் உரை எழுதி இருந்தாலும், அவற்றில் ஆழ்ந்த கருத்துகள் பொதிந்து இருக்கின்றன.
பாரதியாரின் உரை என்பதால் ஆங்காங்கே கவிதை நடை மிளிர்கிறது. பாரதியார் வேதாந்தி என்பதால் இந்த உரையில் வேதாந்தக் கருத்துகள் மேலோங்கி இருக்கின்றன. பகவத் கீதை, நன்கு தொழில் புரியும்படி தூண்டும் தர்மசாஸ்திரம் அல்ல; அது சர்வ துக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான மோட்ச சாஸ்திரம் என்பதை பாரதியார் தனது முன்னுரையில் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 17/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818