ஆச்சரியமூட்டும் அறிவியல்

ஆச்சரியமூட்டும் அறிவியல், ஹாலாஸ்யன், பினாக்கிள் புக்ஸ்,பக்.144, விலை ரூ.135.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி இயங்குகின்றன? அவை இயங்கு வதன் அறிவியல் அடிப்படைகள் எவை? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. புதிய கண்டுபிடிப்புகள் எவை? அவை ஏற்கெனவே உள்ள எந்தப் பொருளின் உயர்வான, அடுத்தநிலையாக உருவாகி இருக்கிறது? என்பதும் நமக்குத் தெரியாது.

அவற்றைப் பற்றியெல்லாம் நமக்குச் சொல்கிறது, தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள்.

மின்சார வசதியில்லாத இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத புவியீர்ப்பு விசையால் இயங்கும் க்ராவிட்டி லைட், ஒருவர் பொய் பேசினால் கண்டுபிடிக்கும் லை டிடெக்டர்(பாலி கிராஃப்), வெறும் ரூ.14 மதிப்புள்ள மலேரியா நோய்க்கான ரத்தப் பரிசோதனை செய்யும் பேப்பர் ஃப்யூஜ், கட்டட விரிசலைத் தானாக சரி செய்யும் பாக்டீரியாக்கள், ஒலி அலையின் பல்வேறு தன்மைகளைப் பயன்படுத்தி வெப்பநிலையைக் குறைக்கும் குளிர்விப்பான் என பல புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய சுவையான கட்டுரைகள் நம்மை வியக்க வைக்கின்றன.

தெர்மா மீட்டர் எப்படி வேலை செய்கிறது? சோப்பு எவ்வாறு அழுக்கை நீக்குகிறது? டிடர்ஜென்ட்டுக்கும் சோப்புக்கும் என்ன வேறுபாடு?  இண்டக்ஷன் அடுப்பு இயங்குவது எப்படி? வயர்லெஸ் சார்ஜரின் நன்மைகள் எவை? இசையை நாம் ரசிக்க செரட்டோனின் என்ற நரம்புக் கடத்தி எப்படி உதவுகிறது? என்பன போன்ற பல தெரியாத விஷயங்களைத் தெரிய வைக்கிறது இந்நூல்.

துள்ளலும், குறும்பும் கலந்த எழுத்து நடை, அற்புதம்.

நன்றி: தினமணி, 8/10/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027236.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *