ஆகாயத் தாமரை
ஆகாயத் தாமரை, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், விலை 220ரூ.
அற்புதமான சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்ற பாரதி வசந்தன், கவிதையாப்பதிலும் தனக்குள்ள வல்லமையை எடுத்துக்காட்டி இருக்கிறார், ஆகாயத்தாமரை நூலின் மூலம். எல்லாம் மரபுக் கவிதைகள். சமுதாயத்தின் கொடுமைகளை சாடும்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பும்போதும், அவருடைய கவிதைகள் நமது இதயத்தைத் தொடுகின்றன. கவிதைகளில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கடல் அலைபோல் பொங்கி எழுகின்றன. மாதிரிக்கு ஒரு கவிதை,
“என் இனம் என் மொழி
என் நிலம் மீட்பது
இதுவே வாழ்வின் லட்சியம் – என்
ஜனங்களின் பேதம்
சாய்த்திட மீண்டும
தமிழாய் மலர்வேன் நிச்சயம்”
இவர் பெயரில் “பாரதி”யின் பெயர் இணைந்திருப்பதால், பாரதியின் கவிதைகளில் உள்ள உணர்ச்சி வேகம், சிறுமையைக் கண்டு சீறும் போர்க்குணம் அனைத்தும் இவர் கவிதைகளிலும் உள்ளன.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி, 28/3/2018.