ஆலய வழிபாடு
ஆலய வழிபாடு, தொகுப்பாசிரியர்: சத்யவதனா; சத்யா பதிப்பகம், பக். 198; விலை ரூ.150.
ஆலயங்களின் சிறப்பம்சங்கள், விளக்கேற்றுதல், விரதம் இருத்தல், தானம் அளித்தல், வழிபாட்டு முறைகள், மந்திர மகிமை போன்றவை குறித்து விளக்கமாக எழுதப்பட்டிருக்கும் நூல்.
முதல் சிவபக்தன், விளக்கேற்றும் ரகசியம், சென்னையில் பஞ்சபூதக் கோயில்கள், கேதார கெளரி விரதம், புரட்டாசி விரதம், நவராத்திரி, மகாளய அமாவாசை என்பன உள்ளிட்ட 30 தலைப்புகளில் ஆன்மிக கட்டுரைகளும், 6 ஆன்மிக சிறுகதைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.
சிதம்பரம், காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகியவை பஞ்ச பூதத்தலங்களாக வழிபடப்படுகின்றன. இந்நூலில், சென்னையிலுள்ள பஞ்ச பூதத் தலங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அபூர்வ சிற்பம் நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோயிலில் அமைந்துள்ளது.
33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவாரூர் தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப்பெரிய கோயிலாக விளங்குகிறது. குல தெய்வங்களின் ஆசி பெற்றவர்களுக்கு மட்டுமே இஷ்ட தெய்வங்கள் அருள்புரியும்; முன்ஜென்ம பாவங்கள் நீங்கிட தரிசிக்க வேண்டிய தலங்களில் ஒன்று, திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயம் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் கூறப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களின் மனதைக் கவரும் நூல்.
நன்றி: தினமணி, 27/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818