எட்டுக் கதைகள்
எட்டுக் கதைகள், திலக் ராஜ்குமார், கடற்காகம் வெளியீடு, விலை: ரூ.145.
மதுரையைச் சேர்ந்த திலக் ராஜ்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இளமைக்கால அனுபவங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மனித உறவுகள், அறிவியல் புனைவுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் கதைகள். இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே ரோபாட்கள் மூலம் டோர் டெலிவரி செய்ய வாய்ப்புகள் உண்டு என்ற அறிவியல் கற்பனையோடு தொடங்குகிறது தொகுப்பின் முதல் சிறுகதையான ‘நீங்கள் கேட்டவை’. கூடவே, அது சாத்தியமாகும் நாளில், தமிழ்நாடு ஏழு பெருநகர மண்டலங்களாகி ஒவ்வொன்றுக்கும் தனி முதல்வர் இருப்பார் என்பது போன்ற அரசியல் கற்பனையும். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்தில் பறக்கும் கார் பயணம், நான்கு தளப் போக்குவரத்து என்று நவீன அறிவியலின் வாய்ப்புகள் கதைவெளியாக விரிந்தாலும் ஆண்-பெண் உறவின் ஈர்ப்பும் விலகலும் சந்தேகங்களும் சந்தோஷங்களும் எப்போதும்போலத்தான் இருக்கும்போல. கதைகளின் சிக்கலான சில தருணங்களை நுட்பமாக எழுதிச் செல்கிறார் திலக் ராஜ்குமார்.
நன்றி: தமிழ் இந்து, 19/6/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818