பேச்சில்லாக் கிராமம்,
பேச்சில்லாக் கிராமம், ம.பெ.சீனிவாசன்; சந்தியா பதிப்பகம், பக்.216; விலை ரூ.215.
நூலாசிரியர் வைணவத் தமிழில் மட்டுமல்ல, சங்கத் தமிழிலும், சைவத் தமிழிலும் கூட ஆழங்காற்பட்டவர். அவரது ஆழ்ந்த, அகண்ட, நுண்ணிய ஆராய்ச்சிப் பார்வை, ஐம்பது கட்டுரைகளாகியிருக்கின்றன.<br>
அவற்றுள் வைணவத் தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் “தாயைக் குடல் விளக்கம் செய்த’, “இரண்டு கன்றினுக்கு இரங்கும் -ஆ’, “ஓடக்காரனுக்கு நட்டாற்றில் கூலி’, ” தமராக்கி – ஒரு கிராமத்தின் பெயர்’, “கொள்கொம்பா? கொழுகொம்பா?’, “நிலவின் நிழலோ உன் வதனம்’, “இந்திரனின் விருந்தாளி’, “நாணி நின்றன பிடியும் களிறும்’, “நீ உயிர், உடல் நானே’ முதலிய பதினெட்டுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் தினமணி-தமிழ்மணியில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கட்டுரைகளுக்கான தமிழ்மணி வாசகர்களின் கடிதங்களும் நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, கண்ணப்ப நாயனார் பெருமையை எடுத்துரைக்கும் “பிடித்த கை எந்தக் கை?’ கட்டுரை, (வடமொழி) கல்வெட்டுக் குறிப்புகளைக் கொண்டு “அது எந்தக் கை’ என்பதை நிரூபிக்கிறது. “நல்லோரின் நட்பு வேண்டாம்’ என்கிறது இன்னொரு கட்டுரை. அச்சத்தினால் ஏற்படக்கூடிய விபரீதத்தை “கண்டது பாம்பு கடித்தது சுருக்கு’ எடுத்துரைக்கிறது; மொட்டைத் தலையனைப் பற்றி விளக்கும் “மொட்டைத் தலையனின் கதை’யும்; “இழந்துவரும் சொற்செல்வம்’, “கிராமத்துச் சொலவடைகள்’, “பல் பன்னிரண்டு காட்டி’ முதலிய கட்டுரைகளும் படிக்க வேண்டியவை.
சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம், வரலாறு, நையாண்டி இலக்கியம், நவீன இலக்கியம், இதிகாசம், இலக்கணம், அரும்பத உரை, கட்டுரைகளுக்குள் குட்டிக் கதைகள் ஆகியவை இந்நூலை அலங்கரிக்கின்றன.
நன்றி: தினமணி, 27/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031443_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818