ஆன்மிக இலங்கைத் திருப்பயணம்
ஆன்மிக இலங்கைத் திருப்பயணம், “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 90ரூ.
பயண நூல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில், பல இந்துக்கோவில்கள் உள்ளன. அங்கு யாத்திரை சென்ற “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், தமது அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார்.
குறிப்பாக, யாழ்ப்பாணம், திரிகோணமலை வரலாறுகளையும், கதிர்காமம் கந்தன் திருக்கோவில், நயினார் தீவு, நாகபூசணி அம்மன் திருக்கோவில், நகுலேஸ்வரம் சிவன் திருக்கோவில் போன்ற திருக்கோவில்கள் பற்றி அவர் கூறுகின்ற தகவல்களைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. ஆன்மிகவாதிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 21/12/2016.