ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம்
ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம், நெல்லை கிருஷ்ணன், ராஜமரகம் வெளியீடு, விலை 400ரூ.
மகாபாரத போர்க் களத்தில் ஆயுதம் ஏந்த தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதை கவி நாடக வடிவில் தரப்பட்டு இருக்கிறத. பகவத் கீதையை மட்டும் சொல்லாமல், போர்க்களம் தொடர்பான அத்தனை நிகழ்வுகளையும் நாடகமாக ஆக்கி இருக்கிறார் ஆசிரியர்.
திருதராஷ்டிரனுக்கும் சஞ்சயனுக்கும் இடையே நடைபெறும் விவாதம் தொடங்கி, பகவத் கீதை உபதேசம் உள்பட அத்தனை சம்பவங்களும் திறம்பட காட்சி ரூபம் ஆக்கப்பட்டு, எளியநடையிலான மரபுக் கவிதைகளாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 20/12/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818