ஆயுஷ் குழந்தைகள்

ஆயுஷ் குழந்தைகள் (சித்த மருத்துவ குழந்தை வளர்ப்பு முறைகள்), டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், ஷன்லாக் பப்ளிகேஷன்ஸ், பக். 620, விலை 390ரூ.

குழந்தைகளை பராமரிக்க உதவும் மருத்துவ களஞ்சியமாக, முழு தொகுப்பாக இந்த பெரிய நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

கரு உருவாவதிலிருந்து மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், கற்றல் குறைபாடுகள், நோய் தடுப்பு முறைகள், குழந்தைகளுக்காக விற்கப்படும் பொருட்கள், அவற்றின் பாதுகாப்புத் தன்மை, குழந்தைகளின் சட்ட உரிமைகள் என, அனைத்தையும் விளக்கி உள்ளார்.

ஒவ்வொரு பக்கத்திலும், ‘மருந்து ரெடி’ என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள மருத்துவ துணுக்குகள், அனைவருக்கும் பயன்தரும். எந்த நோய் வந்தால், உடனடியாக வீட்டில் நாமே எப்படி நிவாரணம் பெறலாம் என, விளக்கி உள்ளார். குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க உதவும் மருந்து பேழை, வீட்டில் இருக்க வேண்டும். அதில் இடம்பெற வேண்டியது என்ன என்று குறிப்பிட்டு இருப்பது அருமை.

புத்தகத்தின் இறுதியில் உள்ள பிரசவ நாள் கணக்கீட்டு அட்டை பெண்களுக்கு உதவும். மொத்தத்தில் பாரம்பரிய மருத்துவம் விரும்பும் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

-ஜிவிஆர்.

நன்றி: தினமலர், 8/5/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *