அபாகஸ்

அபாகஸ் சுலபமாக கணிதம் கற்கும் இரகசியம், வசந்தி ரங்கராஜன், நர்மதா வெளியீடு, விலை 170ரூ.

‘ஜெல்ஸ்’ அபாகஸ் பயிற்சி நிலையத்தின் இயக்குநரான இந்நூலாசிரியர், அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து, இந்தியாவில் கல்வித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய சிறந்த கல்வியாளர். தவிர, பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

இவர் இந்தியாவில் 1997-ஆம் ஆண்டு முதன் முதலாக அபாகஸ் கல்வியை அறிமுகப்படுத்தியவர். இன்று அபாகஸ் பயிற்சி நிறுவனங்கள் பல இடங்களில் பரவி, இக்கல்வி முறையைப் பற்றிப் பலரும் அறிந்துள்ளனர். அபாகஸ் என்பது நான்கு சட்டங்கள் பொருத்தப்பட்ட ஒரு மரப்பலகையின் இடையே, கம்பிகளில் கோர்க்கப்பட்ட மணிகளைக் கொண்டு, கற்பிக்கப்படும் கணிதக்கலையாகும். இன்றைய கணினியின் முதல் படிவம் கூட அபாகஸ்தான்.

முதலில் இது சீனாவில் தோன்றியது என்று ஒரு சாராரும், இல்லை, கி.மு.2400லேயே பாபிலோனியாவில் தோன்றியது என்று மற்றொரு சாராரும் கூறுவர். ஆயினும் இன்று அபாகஸ் உலகில் பரவலாகக் கற்பிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றால், இதன் மூலம் எவ்வளவு பெரிய கணக்கையும் மனதிலேயே நொடிப்பொழுதில் போடுவதற்கு உதவும் இந்த அற்புதக்கலையாகும்.

இது வளரும் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் உள்ளது. அந்த வகையில் அபாகஸ் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது முதல் இதற்கான திறமையை வளர்க்க பயிற்சி எவ்வளவு அவசியம் என்பது வரை மொத்தம் ஏழு அத்தியாயங்கள் இந்நூலில் உள்ளன. இக்கலையைப் பற்றிய அடிப்படை விஷயங்களை ஓரளவுக்கு நேரடி பயிற்சி மூலம் அறிந்து கொண்டால், நம் குழந்தைகளுக்கு மிக எளிதில் சொல்லிக் கொடுக்க இப்புத்தகம் மிகவும் உதவும் என்பது திண்ணம்.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 24/10/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000002643.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *