அப்துல் கலாம் உதிர்த்த முத்துக்கள்
அப்துல் கலாம் உதிர்த்த முத்துக்கள், மு.பழனியப்பன், முல்லை பதிப்பகம், விலைரூ.120.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அனுபவ மொழிகள் மற்றும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ருசிகரமான சம்பவங்களை விவரிக்கும் நுால்.
அதில் ஒன்று…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில், 1954 மார்ச்சில் பி.எஸ்சி., படித்து தேறினார். மதிப்பெண் சான்றிதழ் கிடைத்ததை வைத்து, சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் படிக்கச் சேர்ந்தார். காலம் சுழன்றது.
அந்த பட்டம் வாங்க வாய்ப்பே வரவில்லை. அவருக்கு சென்னை பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது; அதை நேரில் பெற அவரால் வர முடியவில்லை.
பின்னர் பல்கலைக் கழகத்தினர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய போது சிரித்தபடியே, ‘இன்னும் பி.எஸ்சி., பட்டப்படிப்பு பட்டமே பெறவில்லை…’ என்றார். அதைத் தேடி எடுத்து, 48 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்டது. இது மாதிரி நிறைய செய்திகளும், கருத்துக்களும் மிகுந்த புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031634_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818