அச்சம் தவிர்
அச்சம் தவிர், வெ. இறையன்பு, ஸ்ரீ துர்க்கா பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ.
பொதுவாக மாணவ – மாணவிகள் எல்லோருக்கும் உள்ள ஒரு பெரிய மனக்குறை, ‘நான் ஆண்டு முழுவதும் நன்றாக படிக்கிறேன். ஆனால் தேர்வு எழுத போகும்போது மட்டும் என் கை கால்கள் நடுங்குகின்றன. நான் ஏற்கனவே படித்தவை எல்லாம் மறந்துவிடுகின்றன. மதிப்பெண்களும் நான் எதிர்பார்த்த அளவு எனக்கு கிடைக்கவில்லை. நான் என்ன செய்வேன்’ என்று கவலைப்படுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் தேர்வின் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம். அந்த அச்சத்தை தவிர்க்க என்ன வழிமுறையை மாணவ சமுதாயம் கையாள வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன் எந்தெந்த வகையில் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்வை ஒரு உத்தியாக, எவ்வாறு கையாண்டு கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் மிக விரிவாக மாணவ சமுதாயத்திற்கு ‘அச்சம் தவிர்’ என்ற இந்த நூலில் எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஐ.ஏ.எஸ். அதிகாரி என பன்முகம் கொண்டுள்ள வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.‘
இதை படித்தால் மாணவர்கள் பயத்தை பந்தாடலாம், தேர்வை கொண்டாடலாம். ஒவ்வொரு மாணவர்கள், ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டிய நூல் ‘அச்சம் தவிர்’
நன்றி: தினத்தந்தி, 7/9/2016.