அகத்தைத் தேடி
அகத்தைத் தேடி, தஞ்சாவூர்க் கவிராயர், விலை: ரூ. 200.
அகத்தின் சாவி
அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்து கிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான, எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில்தான் உண்மைக்குத் திரை போடப்பட்டு, பூசைகளும் புனஸ்காரங்களும் தொடங்குகின்றன.
அனுஷ்டானங்களும் மடத்தனங்களும் நியமங்களும் மனிதனைப் பிரித்து வகுக்கும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன. நன்மை, தீமை, கருத்தியல், விருப்புவெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலத்தில் மனிதர்கள் நேசிக்க மறந்துவிட்ட சூழலில் தஞ்சாவூர்க்கவிராயர், நம்மையும் உள்ளடக்கிய இந்த உலகத்தை, சக உயிர்களை, இயற்கையை, மனிதர்களை, புலப்படுவதை, புலப்படாததை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தந்திருக்கும் சாவி ‘அகத்தைத் தேடி’.
நன்றி: தமிழ் இந்து, 4/12/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818