அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல், ஸ்ரீ ஸக்தி சுமனன்.

அகத்திய மகரிஷி, சித்தர்கள் கண்டறிந்த எல்லா வித்தைகளையும் தெளிவாக கூறியவர்களில் முதன்மை ஆனவர்.

அகத்திய மகரிஷி, தன் ஞானத்தை சுருக்கி, சித்தர் மார்க்கத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 30 பாடல்களில் அகத்தியர் ஞானம் 30 ஆக தந்திருக்கிறார்.

தற்காலத்தவர்கள் விளங்கி கொள்ளும்படி, தியான சாதனையில் சித்த வித்யா விளக்கவுரையாக ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் எழுதிய விளக்கவுரையே, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் எனும் இந்நூல்.

அகத்திய மகரிஷியை, குருவாக கொண்டு சாதனை செய்ய விரும்பும் சாதகர்களுக்கு உதவும் வகையில், அகத்திய மூலகுரு மந்திரம் உள்ளிட்ட, பல விஷயங்களை இதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தில் யோகவித்தைகளை பலர் கண்டறிந்துள்ளனர். அகத்தியர் என்ற பெயர் நமக்கு பழகிய பெயர்.அதனால், இதை வாசகர்கள் விரும்பி ஏற்கலாம்.

– எல்.முருகராஜ்

நன்றி: தினமலர், 29/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *