அறிந்ததும் அறியாததும்
அறிந்ததும் அறியாததும், டாக்டர் ஆர்.வேங்கடரமணன், பினவுஸ் புக்ஸ், விலை ரூ.140.
அறிவியல் என்றென்றும் அறிவுப் பெட்டகம் என்பது உலகமறிந்த உண்மை. கண்டறியப்பட்டு நுாற்றாண்டு கண்ட வேதிப்பொருள் மற்றும் எண்ணற்ற பலன்கள், ‘டைமெதில் சல்பாக்சைடு’ என்கிறார், நுாலாசிரியர் வேங்கடரமணன்.வறுமையின் நிறம் சிவப்பு; தக்காளியின் நிறமும் சிவப்பாகக் காரணம், லைகோபீன், மாட்சா தேநீர் பச்சை! சிறிதினும் சிறிது கேள் என்கிறது நானோ தொழில்நுட்பம். அது பற்றிய வியத்தகு செய்திகளை, சின்னஞ்சிறு உலகத்தில் குறிப்பிடுகிறார்.தாவர பட்சிணிகள், மாமிச பட்சிணிகள் நாம் அறிந்தவை. மாமிசத்தை உண்ணும் தாவரத்தைப் பற்றிய சுவாரஸ்யமான வேதியியல் தகவல்கள் அடங்கிய கையடக்க நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
– மாசிலா ராஜகுரு.
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818