அறிவியலுக்கு அப்பால்
அறிவியலுக்கு அப்பால், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 125ரூ.
நம்மைச் சுற்றிலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கே சவால் விடுபவை அவை.
அவற்றில் சிலவற்றை அலசி, அவற்றை மூடத்தனம் என்று ஒதுக்காமல், அதில் உள்ள உண்மைத்தன்மையை தேட வைக்கும் முயற்சி இந்நூல்.
இசை ஞானமே இல்லாத ரோஸ்மேரி பிரவுன் – இசைமேதைகளின் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது கம்போசிஷன்களில் இசைத்தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொல்லப்படுவதை முன்கூட்டியே சொன்ன ஜீன் டிக்சன், எழுதப் படிக்கத் தெரியாத மனிதக் கணினி, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நிலவில் அப்பல்லோ விண்கலம் மனிதனோடு இறங்கப் போவதை நாவலாக எழுதியவர், கனவுகளால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது என்று அறிவியலுக்கு சவால்விடும் இதுபோன்ற அதிசயங்களின் உண்மையைத் தேடுபவர்களுக்கு இந்நூல் ஒரு பகிர்வாக இருக்கும்.
-இரா. மணிகண்டன்,
நன்றி: குமுதம் 1/2/2017.