அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள்
அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள், சத்யவதனா, சத்யா பதிப்பகம், பக். 1340, விலை 675ரூ.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உட்பட, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வாரியாகவும், ஆந்திரா, கர்நாடகா, அசாம், கேரள மாநிலங்களில் உள்ள, 187 ஹிந்து தலங்கள் பற்றிய சிறு முன்னோட்டத்தை, இந்நுால்கள் வழங்கியுள்ளன.
நான்கு பாகங்களை, சத்யவதனா என்பவரும், ஐந்தாவது பாகத்தை, வீரரகுவும் எழுதியுள்ளனர்.
ஐந்தாவது பாகம், அதிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. உலகின் முதல் சிவன் கோவில், சிவராத்திரி சிறப்புகள், 1,008 லிங்கங்களின் பெயர்கள் என, சுவாரஸ்யமாகவும் உள்ளது.
நம் மாநிலத்தில், இத்தனை கோவில்கள் உள்ளனவா என்ற ஆச்சரியத்தையும், இதில் எந்தெந்த கோவிலுக்கு செல்லலாம் என ஆர்வத்தையும், வாசகர்களுக்கு இந்நுால் நிச்சயம் ஏற்படுத்தும்.
– சி.கலாதம்பி
நன்றி: தினமலர், 13/10/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818