அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ.

நீயே உனக்கு நிகரானவன்

ஏழு வயதில் எம்.ஆர்.ராதா ஆலந்தூர் மன மோகன ரங்கசாமியின் நாடகசபாவில் இணைகிறார். “கிருஷ்ண லீலா’ நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடிக்கிறார். அதன் பிறகு பல சபாக்கள், பல மேடைகள். பால மீன ரஞ்சனி சங்கீத சபாவில் மட்டும் 15வருட அனுபவம்; சமூக சீர்திருத்தக்ப கருத்துகள் உடைய அவருக்கு, பெரியார், அண்ணாவுடன் பரிச்சயம் உண்டாகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, மு.கருணாநிதி ஆகியோருடனான நாடக அனுபவங்கள் கிடைக்கின்றன.

கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய “இழந்த காதல்’\ நாடகத்தை பல சபாக்கள் நடத்தினாலும், ராதா நடத்தும் இழந்த காதலுக்கே கூட்டம் சேர்ந்தது, நாடகக்காரர்களை வெறுத்த ஜி.டி.நாயுடுவின் அபிமானத்தைப் பெற்று, அவருடைய தொழிற்சாலையிலேயே எம்.ஆர்.ராதா நாடகம் நடத்தியது, வயதான காலத்தில் திருச்சியில் நாடகம் நடத்தச் சென்றபோது, மாலையில் நாடகம் நடக்கவிருந்த நிலையில் காலையில் அவர் மரணம் நிகழ்வது என எம்.ஆர். ராதாவின் நாடக வரலாற்றுடன், அவரின் திரையுலக வரலாற்றையும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர்

. ராதாவின் கறார் குணம் பிரசித்தி பெற்றது. ஆனால், அவரின் தயாள குணம் இந்நூலின் மூலம்தான் அறியப்படுகிறது!

நன்றி:தினமணி09/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *