அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. நீயே உனக்கு நிகரானவன் ஏழு வயதில் எம்.ஆர்.ராதா ஆலந்தூர் மன மோகன ரங்கசாமியின் நாடகசபாவில் இணைகிறார். “கிருஷ்ண லீலா’ நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடிக்கிறார். அதன் பிறகு பல சபாக்கள், பல மேடைகள். பால மீன ரஞ்சனி சங்கீத சபாவில் மட்டும் 15வருட அனுபவம்; சமூக சீர்திருத்தக்ப கருத்துகள் உடைய அவருக்கு, பெரியார், அண்ணாவுடன் பரிச்சயம் உண்டாகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, மு.கருணாநிதி ஆகியோருடனான நாடக அனுபவங்கள் கிடைக்கின்றன. கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய “இழந்த காதல்’\ நாடகத்தை பல […]

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, ஆர்.சி.சம்பத்,கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன், புரையோடிப்போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான்/ நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப் போன்ற தலைசிறந்த நடிகன், இத்துனைக்கும் மேலே, திரைப்படங்களால் வில்லனாக மக்களிடையே சித்தரிக்கப்பட்ட அவர், தனி மனித வாழ்க்கையில் எப்படி ஒரு உன்னத மனிதனாக இருந்தார் என்கிற ரகசியத்தையும் இந்த நூல் மூலம் அறிய வைக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more