பாலகுமாரனின் முகநூல் பக்கம்
பாலகுமாரனின் முகநூல் பக்கம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ.
முகநூலில் முன் தகவலாக பதிவு செய்த விசயங்களை தொகுத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன். “உள்ளே கிடப்பது பற்றி அறிவீரோ? நான் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் எந்த செயலும் செய்யாது. இந்த நிலை எப்படி வரும்.
உள்ளே உள் மனதை உற்று பார்த்தபடி இரு. முதலில் திணறும். மனம் ஓடும். இழுத்து நிறுத்த வேணும். ஏதோ ஒரு சமயம் மனம் வசப்படும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிரு. இது முக்கியம். மனம் கவனிக்க மூச்சு தெரியும். மூச்சு கவனிக்க மனம் அடங்கும். இது கம்பியில் நடக்கும் வித்தை. வைராக்கியம் வேணும்” என்பது போன்ற பல செய்திகள் முகநூலில் விரவிக்கிடக்கின்றன.
மேலும் பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றிய பக்திப் பாடல்களுக்கு அறிமுகமும், சத்சங்கம் பற்றிய செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளது. தான் பெற் றஆன்மிக அனுபவத்தை ஒரு துளியும் மறைக்காது மற்றவர்களுக்குச் சொல்லும் மனம் பாலகுமாரனுக்கு வாய்த்திருப்பதை அறிய முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.