பீ கேர் ஃபுல்
பீ கேர் ஃபுல், மதுரை சத்யா, செங்கனி பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100.
அனுபவங்களால் கற்றுக் கொண்டதை கவிதை போல் வெளிப்படுத்தும் முயற்சி. சொற்குவியலின் தொகுப்பு நுால். சிறிய கவிதை வடிவில் நடப்புகள் சொல்லப்பட்டுள்ளன. முதல் கவிதை, ‘அன்பின் கண்ணாடியை கழற்றிய பின்பே நம்மால் விரும்பப்பட்ட செயல்களை எல்லாம் குருட்டுத்தனம் என்கிறோம்’ என உள்ளது.
இது போல் நேரடியாக கருத்துக்களை சொல்லும் கவிதைகள் அடங்கிய புத்தகம். ஒன்றை சொல்லும் முன் ஆயிரம் முறையும், எழுதும் முன் பல்லாயிரம் முறையும் யோசிக்க வேண்டும் என்ற முன்னுரையுடன் வெளிவந்துள்ள நுால்.
– விநா.
நன்றி: தினமலர், 26/12/221.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818