பாரதி யார்?
பாரதி யார்?, தொகுப்பாசிரியர்: டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.320, விலை ரூ.80.
பாரதி – யார்? என்ற இந்தப் புத்தகம் ஓர் அரிய புத்தகம் என்றால் அது மிகையே அல்ல. பாரதி பற்றி அவருடன் மிக நெருக்கமாகப் பழகியவர்கள் முதல், அவருடைய சம காலத்தவர், பிற்கால அறிஞர்கள், நண்பர்கள், பாரதி அன்பர்கள், மகாகவி பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
பாரதியை நேரில் அறிந்தவர்களின் கூற்றுகளும், அவரது எழுத்து வாயிலாக தரிசித்தோரின் உணர்ச்சியும் எழுச்சியும் அளிக்கத் தக்க வரிகளும் நம்மைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. அவற்றை இன்றைய தமிழகத்துக்கும் பாரதத்துக்கும் பொருத்திப் பேச முடியும்.
பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையையுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ்நாட்டின் புகழாகும் என்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய கட்டுரையில் கூறியது எவ்வளவு உண்மையாகிவிட்டது!
"பாரதியார் பாடல்கள் அரசியலையும், சாதி சமயங்களையும் கடந்து நிற்பவை; இந்தியாவின் மறுமலர்ச்சியைச் சங்கநாதம் செய்து அறிவிப்பவை. தேசிய நிர்மாணத்தில் தமிழ் மக்கள் பங்கு பெற வேண்டுமானால், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறுவன் சிறுமியின் கையிலும் பாரதி பாடல்கள் அளிக்கப்பட வேண்டும். நம் காலத்தில் பாரதியார் பிறந்து பாடியதனால், இந்தத் தமிழ்ச் சாதியின் சக்தி அழிந்துவிடவில்லையென்று நிச்சயமாகத் தெரிகிறது என்று ராஜாஜி எழுதுகிறார்.
வ.உ.சி, கல்கி, பாரதிதாசன், திரு.வி.க., மு.வ., பாரதி சகோதரர், மகள் என அறுபது பேர்களின் கட்டுரை, கவிதைகளின் அணிவகுப்பாக, இந்த மிக அருமையான தொகுப்பை உருவாக்கி, நூலாக்கிய தொகுப்பாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நன்றி: தினமணி, 9/4/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026697.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818