டேவிட்டும் கோலியாத்தும்
டேவிட்டும் கோலியாத்தும், மால்கம் கிளாட்வெல், தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 352 , விலைரூ.300.
பின்தங்கியவர்கள், பொருந்தாதவர்கள் எனக் கருதப்படுவோர் – பேராற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படுவோரை, தங்களது போராட்டத்தின் மூலம் எதிர்கொண்டு, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு உண்மை நிகழ்வுகளை உதாரணம் காட்டி இந்நூல் விளக்குகிறது .
முதலாம் உலகப் போரின் முடிவில், அரேபியாவை ஆக்கிரமித்திருந்த துருக்கியின் வலிமையான ராணுவத்தை, முறையான போர் உத்திகளை அறியாத பழங்குடியின மக்களைக் கொண்டு வீழ்த்திக் காட்டிய டி.இ.லாரன்ஸ், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட டேவிட் பெளவீஸ் தனது உற்றுக் கேட்கும் உத்தியைப் பயன்படுத்தி சிறந்த வழக்குரைஞராக மாறியது, கூடைப்பந்து விளையாடிய அனுபவமே இல்லாத மும்பையைச் சேர்ந்த விவேக் ரணதிவே, அமெரிக்காவில் ரெட்வுட் சிட்டி அணிக்காக பயிற்சியளித்து சாதனை படைக்கச் செய்தது என நிறைய உதாரணங்கள்.
ஏதோ ஒரு வகையில் வரும் தடைகளால், எதையும் சாதிக்க முடியாது என்ற மனநிலை ஏற்படுவதற்கு சவால் விடுகிறார் நூலாசிரியர். பலவீனத்தையே பலமாக மாற்றுதல், ஒதுக்கிவைக்கப்பட்டதற்கான காரணத்தையே கவனிக்க வைக்கும் விஷயமாக மாற்றுதல் என மாற்றுச் சிந்தனையுடன் அணுகி வெற்றி பெற்றவர்களின் கதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவருக்கும் உந்துசக்தி.
நன்றி: தினமணி, 13/3/2017.