எக்சைல்
எக்சைல், தஸ்லிமா நஸ்ரின், ஆங்கிலத்தில்: மஹார்க்யா சக்ரவர்த்தி பெங்க்வின், விலை: ரூ.599.
சுதந்திரம் என்பதே பேச்சு
ஆணாதிக்கச் சமூகத்தில் மத அடிப்படைவாதமும் சேர்ந்துகொண்டால் நவீனச் சிந்தனைகளுக்கு எத்தகைய எதிர்ப்புகள் காத்திருக்கின்றன என்பதற்கான நம் காலத்து உதாரணமே தஸ்லிமா நஸ்ரின். ஒரு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருந்த அவர் பெண்ணுரிமை பேசியதற்காக வங்க தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்.
ஆட்சியாளர்களோ அவரது நூல் ஒன்றுக்குத் தடைவிதித்து அவரை கொல்கத்தாவிலிருந்து விரட்டினார்கள். அன்றிலிருந்து சுமார் ஏழு மாத காலம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வீட்டுக் காவலிலும் அரசின் ரகசிய இல்லங்களிலும் தங்கவைக்கப்பட்டு இறுதியில் அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஓர் எழுத்தாளராக அந்த ஏழு மாத கால அனுபவத்தை, மத அடிப்படைவாதிகளின் வீச்சு எந்த அளவுக்கு இந்தியச் சமூகத்தில் ஆழப் படிந்துள்ளது என்பதை இந்நூலில் எடுத்துச்சொல்கிறார் தஸ்லிமா நஸ்ரின்.
நன்றி: தமிழ் இந்து, 29/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818