அருந்தவச் செல்வர் அரிராம்சேட்
அருந்தவச் செல்வர் அரிராம்சேட், சின்னராசு – முத்தப்பா, யூகே பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.200
அரிராம்சேட் வடநாட்டுக்காரர் அல்ல; நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல்காரர். இவரை ஒதுக்கிவிட்டு தியாகராஜ பாகவதரின் வரலாற்றை எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு பாகவதர் மீது ஈடுபாடு கொண்டு, இசை கற்றுத் தேர்ந்து, பின்பு பாகவதரோடு இணைந்து இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார்.
எம்.ஆர்.ராதா, கலைவாணர், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், திருவாவடுதுறை ராஜரத்தினம் ஆகியோரின் திறமையையும் கொண்டாடியிருக்கிறார். அவரது இந்த வரலாற்று நூலில் உள்ள செய்திகள் வியப்பூட்டுகின்றன. அவர் வளர்த்த யானைகளின் பாதங்கள் பழுதுபடக் கூடாது என்று அதற்குக் காலணி தைத்துப் போட்ட செய்தி வியப்பளிக்கிறது.
‘நல்ல நேரம்’ படத்தில் நடிப்பதற்காக சில வாரங்கள் அரிராம் சேட் வீட்டில் தங்கியிருந்து அவர் வளர்த்த யானைகளுடன் நெருங்கிப் பழகினாராம் எம்.ஜி.ஆர். இது போன்ற செய்திகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.
நன்றி: தமிழ் இந்து, 2/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818